பக்கம்:கடவுள் பாட்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


பொன்னை நம்பி வாழ்வோரும்
பொருளை நம்பி வாழ்வோரும்
என்னைத் திரும்பிப் பார்ப்பாரோ
இறைவா நீயே எனைக்காப்பாய்!
164
மண்ணும் நீரும் உன்வடிவம்
வானும் காற்றும் உன்வடிவம்
விண்ணில் சுழலும் செங்கதிரும்
வெள்ளை நிலவும் உன்வடிவம்
எண்ணில் உயிர்கள் அத்தனையும்
எரியும் நெருப்பும் உன்வடிவம்
கண்ணில் தெரியும் கருணைஒளி
கடவுள் உன்றன் திருவடிவம்.
165
ஒடும் ஆற்றின் கரைமீதே
உட்கார்ந் திருந்தும் தாகத்தால்
வாடும் ஒருவன் போல்நானும்
வழியும் கருணை வெள்ளத்தை
நாடும் அறிவில் லாதிங்கே
நலிந்து கிடந்தேன் எம்பெருமான்
ஆடும் உன்றன் திருவடியை
அடைந்தேன் இனிமேல் விடுவேனோ?
166
தந்தை யுண்டு தாயுண்டு
தம்பி மார்கள் பலருண்டு
சிந்தை இனிக்கப் பழகிடவே
சேரும் தோழர் குழுவுண்டு
வந்து மணந்த துணையுண்டு
வாய்த்த மழலைப் பேறுண்டு
செந்தேன் ஒழுகும் திருவருளும்
சேர்ந்தால் எல்லாம் பயனுண்டே!
167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/56&oldid=1211768" இலிருந்து மீள்விக்கப்பட்டது