பக்கம்:கடவுள் பாட்டு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

செய்கிறது. அந்த அறியாமையை விளக்கக் கூடிய ஒர் ஆற்றல் பெற்ற தலைவனாகக் கருதப்படுபவர் எல்லாம் வல்லவராக விளங்குகின்ற கடவுளே யாவார்.

'அறிதோ றறியாமை கண்டற்றே' என்பது தெய்வமறை. நாம் ஒன்றைப் புதிதாக அறிந்து கொள்ளும் போதெல்லாம், இதுவரை நாம் அதை அறியாமல் இருந்த தன்மையை உணர்கிறோம். அது மட்டுமன்று இன்னும் நாம் அறியாதவை எத்தனையோ உள என்பதையும் அறிகிறோம். எல்லாம் அறிந்து விட்டோம் என்று நினைப்பவர்கள் அற்பர்கள். அவர்கள் அறிந்தது கைப்பிடியளவுதான். அவர்கள் அறியாமையோ உலகளவு ஆகும்.

உலகளவு அறியாமை விளங்குகின்ற போது, மனிதன் அறிந்தது சிறு பகுதிதான் என்று உணர்கின்ற போது, மனிதன் தன் ஆற்றலெல்லாம் கூட்டி, இனி முடியாதது என்று கை விட்டுவிடக் கூடிய ஒரு நிலைவரும்போது வந்து கிடைக்கும் உதவி அல்லது அருள் யாருடையதாயிருக்கும். நிச்சயமாக இறைவனுடைய தண்ணளிதான் அது.

இதையுணர்ந்து தான் பெரியவர்கள், அவன் எல்லாம் வல்லவன்-அளவற்ற அருளாளன்-நிகரற்ற பொருளாளன் என்றெல்லாம் இறைவனைக் குறிப்பிட்டு மகிழுகிறார்கள்.

இறைவனை யாரும் கண்ணாரப் பார்த்ததில்லை; இறைவனை இதுவரை யாரும் நேருக்கு நேராகச் சந்தித்தது இல்லை. ஆனால், கதைகளிலே இறைவனை நேருக்கு நேராகச் சந்தித்ததாகவும், பேசியதாகவும், அடியார்களுக்கு அவன் கூடவே வந்து உதவியதாகவும் நாம் படிக்கிறோம். இவை யாவும் கற்பனையே. ஆனால் இறைவன் காட்சியளித்ததும், பேசியதும், நாடக மாடியதும் கற்பனையாக இருக்க முடியுமே தவிர இறைவனே கற்பனையாக இருக்க முடியாது. இறைவனே கற்பனையாக இருந்தால், இந்த அண்ட கோளங்கள் அனைத்தையும் , சிறிதும் பிசகாத கணக் கணக்-