பக்கம்:கடவுள் பாட்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


எங்கோ இன்ப உலகுளதாம்
எழில்மங் கையர்வந் தாடுவராம்
அங்கே போக வேண்டுமென
ஆசைப் படுவார் பிறரெல்லாம்
அங்கே போயும் கூத்தியரை
அணையும் ஆசை எனக்கில்லை.
மங்கா உன்றன் திருத்தாளே
மனத்திற் கொண்டேன் பெருமானே.
182
இம்மை மறுமை என்பதெல்லாம்
இல்லா திருக்கும் இடமொன்றே
அம்மை யப்பன் பிள்ளையென
யாரும் அங்கே உறவில்லை
எம்மை யாளும் ஒருதலைவன்
இருப்பாய் நீயுன் பொன்னடிகள்
தம்மைப் பற்றி நின்றிடுவோம்
தண்மை யருளைப் பொழிந்திடுவாய்.
183
கோடி முனையில் விசையழுத்தக்
கூடத் தெரியும் விளக்குக்கும்
ஒடி மின்கள் பாய்வதற்கே
ஒன்றோ இரண்டோ நொடிசெல்லும்
நாடி உன்னைக் கைதொழுதால்
நல்லாய் நீவந் துள்ளமுற
ஆடி அசையும் சிறுபொழுதும்
ஆகா தாகா துண்மையிதே!
184
அழியும் உலகம் முழுதெனினும்
அழியா திருப்பாய் நீ ஐயா
அழியா திருக்கும் உன்தாளை
அகத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/61&oldid=1211788" இலிருந்து மீள்விக்கப்பட்டது