பக்கம்:கடவுள் பாட்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


அழியா திருப்பேள் நானுமென
ஆசைப் பட்டேன் பெருமானே
அழியா வரம்நீ தந்தருள
அடியைத் தந்தால் அதுபோதும்.
185
வெய்யில் காய்ந்த ஓரிடத்தில்
வெள்ளந் திரள மழைபொழியும்
பொய்யும் தீதும் பொயொருநாள்
புதிய உண்மை வந்துலவும்
மெய்யும் நலமும் பார்முழுதும்
மேன்மை யடையும் அந்நாளில்
ஐயன் திருத்தாள் அடிபணிந்தோர்
அனைவ ருக்கும் பயன்கிட்டும்.
186
உள்ளம் அன்பால் உருகிற்றே
உருகி அமுதாய்ப் பெருகிற்றே
வெள்ளம் பெருகப் பெருகஉடன்
விளைந்த தெல்லாம் மெய்யன்பே
கள்ளம் அற்ற மெய்யன்பில்
கனிந்த தெல்லாம் உன்னருளே!
உள்ளும் புறமும் இருந்தாளும்
ஒருவா என்றன் பெருமானே!
187
நெஞ்சம் முற்றும் உன்னினைவே
நிறையக் கொண்டேன் எம்பெருமான்
தஞ்சம் என்றுன் திருவடியே
தலைமேற் கொண்டேன் எம்பெருமான்
அஞ்சும் நிலையைப் போக்கிய உன்
அருளைப் போற்றிப் புகழ்ந்தேன்நான்
மிஞ்சும் அன்பால் உன்பணியே
மேற்கொண் டொழுகு கின்றேன்நான்.
188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/62&oldid=1211789" இலிருந்து மீள்விக்கப்பட்டது