பக்கம்:கடவுள் பாட்டு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


மண்ணில் உன்றன் அருளாலே
மலரும் இன்பக் காட்சியெலாம்
எண்ணி யெண்ணி உனைப்பாடி
என்பும் உருகிப் போச்சையா!
அண்ணல் உன்றன் அருள்பெறவே
ஆர்வங் கொண்டு துடித்திருந்தேன்.
எண்ணம் பவித்த திணிமேலே
இல்லை கவலை எனக்கொன்றே!
189
வாயைப் படைத்துத் தந்தாய்நீ
வாழ்த்தி வாழ்த்தி உனைப்பாட
தூய உன்றன் புகழ்கேட்கத்
துணையாய் இரண்டு செவிதந்தாய்.
பாயும் உன்றன் அருள் வெள்ளம்
பரவ விரிந்த மனந்தந்தாய்
ஆயுங் கண்ணும் நல்லறிவும்
அளித்தாய் உன்னைக் கண்டிடவே!
190
உலகப் பொருள்கள் உன்னுடைமை
உயிர்கள் யாவும் உன்னடிமை
மலரை யொத்த திருவடியை
வணங்கி நிற்றல் எம்கடமை
நலமும் மகிழ்வும் எமக்கருளி
நாளுங் காப்பாய்; உன்பெருமை
பலவும் சொல்லிப் புகழ்பாடிப்
பணிந்து நின்றோம் எம்பெருமான்.
191
அடைதற் கரிய தென்றிடுவார்
ஐயா உன்றன் திருவடியே!
அடைதற் குரிய தென்றிடுவார்
ஐயா உன்றன் திருவடியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/63&oldid=1211791" இலிருந்து மீள்விக்கப்பட்டது