பக்கம்:கடவுள் பாட்டு.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

கோடு, இயக்கி நடத்துகின்ற ஆற்றல் வாய்ந்த ஒரு பெருந்தலைவனை நாம் மறுப்பதாகும்.

ஒரு மலையின் உச்சியிலிருந்து உருட்டி விடும் கல், இன்ன இடத்தில்தான் போய்விழும் என்பதை நாம் கணிக்க முடியாதவர்களாயிருக்கிறோம். ஆனால். கோளங்கள் ஒன்றையொன்று இழுப்புச் சக்தியால் ஈர்த்துக்கொண்டிருப்பதையும், ஒன்றையொன்று கணக்காகச் சுற்றி வருவதையும், அவற்றின் சுழற்சிகளால், பருவங்கள் மாறுபடுவதையும், ஆண்டு தோறும் பருவங்கள் தவறாது அவ்வக்காலத்தில் வருவதையும், இப்படிப் பல நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றபோது ஆற்றல் வாய்ந்த இறைவனின் மிகப்பெரிய நிலையை நாம் தெளிவாக உணர முடிகிறது.

கோளப் பரப்பில் எங்கோ ஒரு மூலையிலே ஒரு சின்னஞ் சிறிய உயிராக இயங்கிக் கொண்டிருக்கும், நம்முடைய தனிப்பட்ட வேண்டுகோள்களைச் செவிமடுத்து அவரவருக்குரிய அருளிச் செயல்களை எவ்வெவ்வாறோ நிறைவேற்றிக் கொடுத்து மிகச் சிறிய செயலும் தன் பெருஞ்செயவீடுபாட்டால் பிழையுறாது நடத்திக் கொடுத்து வரும் ஆண்டவனுடைய நுண்ணிய நிலையையும் நாம் பன்முறையும் உணர முடிகிறது.

இறைவனை வேண்டித் தொழுததாலேயே பல நற்செயல்கள் மிக எளிதாகவும் விரைவாகவும் நிறைவாகவும் தங்கள் வாழ்க்கையில் நடந்ததைப் பலர் அனுபவத்தில் அறிந்து உணர்ந்து ஆனந்த வயமாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அருளாளனாகிய பேரிறைவனைப் பாடிப்பாடித் தொழுவதுதொழுது வேண்டுவதே-ஒரு பேறாகும். இப்பேற்றினை மானிடப்பிறப்பாளர்கள் அடைந்து மகிழவேண்டும் என்பதற்காக, பல சான்றோர்கள் போற்றிப் பாடல்களை இயற்றி வைத்திருக்கிறார்கள். இறைவனைப் பாடுவதன் மூலம் உளத்தூய்மை பெற்றவர்கள் தங்கள் உள்ளக் கோயில்களை