பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99
 


ஐந்து அல்ல-காற்று, தீ, நீர், மண் என நான்கேயாகும். உடலே (உடலின் இயக்கமே உயிர் ஆகும். மறுமை (மறு உலக வாழ்வு) இல்லை. கடவுள் என ஒன்றும் இல்லை-என்பன உலோகாயதக் கொள்கைகள்.

இதற்கு நேர்க்காட்சி வாதம் (Positivism) என்ற பெயரும் உண்டு. கண்டதே காட்சி - கொண்டதே கோலம் ஆகும். பொறி புலன்கள் வாயிலாகவோ அறிவியல் அடிப்படையிலோ அறிய முடியாதவை உண்மையல்ல-என்கிறது இக் கொள்கை. இத்தகைய கொள்கையினர் பற்றிய குறிப்புகள் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. திருக்காளத்திப் புராணம், திருவாச கம் முதலிய நூல்களின் ஆசிரியர்கள் இக்கொள்கை யினரைக் கண்டித்துள்ளனர். உலோகாயத மதத்தானைப் பாம்பு எனவும் அவன்து கொள்கையை நஞ்சு எனவும் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறிக் கண்டித்துள்ளார்.

“உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி”

(போற்றித் திருவகவல்-56-57)என்பது பாடல் பகுதி. தத்துவ லிங்கதேவர் என்பவர் ‘தத்துவ நிசானு போக சாரம்’ என்னும் நூலில் (பக்கம் -259), ‘தேகமே ஆன்மா என்பவன் சார்வாகன்’ எனச் சார்வாகனுக்கு இலக்கணம் கூறியுள்ளார். உடம்பின் இயக்க நடைமுறையைத் தவிர, மனம், உயிர் என ஒன்றும் இல்லை எனக் கூறுபவர்கள் நடத்தைவாதக் காரர்கள்’ (Behaviourists) என்னும் பெயராலும் சுட்டப் படுகின்றனர். இத்தகு உலோகாயத மதக் கொள்கையைப் பற்றி, மாதைத் திருவேங்கடநாதரின் பிரபோத சந்திரோதயம்’ என்னும் நூலில் விரிவாகக் காணலாம்,