பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
 


உலகம் மட்டுமே உண்மைப் பொருளாகும் என்னும் கொள்கை பலரால் மறுக்கப்படினும், இக்கொள்கையே சரியானது என்னும் உண்மை, இது காறும் மேலே கூறப்பட்டுள்ள விளக்கங்களால் தெளிவாகும். உலகத்துக்கு உலகில் உள்ள பொருள்களுக்கு என்றும் அழிவு இல்லை. ஆனால், ஒன்று திரிந்து மற்றொன்றாகும்; இஃது அழிவு அன்று - திரிபே. எனவே, உலகம் உண்மைப் பொருள் என்பது வெளிப்படை.