பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. கடவுள் பிறந்த இயற்கை வரலாறு


உலகம் ஒன்று மட்டுமே உண்மை; கடவுள் என ஒரு பொருள் இல்லை எனில், கடவுள்’ என்னும் சொல் எவ்வாறு தோன்றியிருக்க முடியும்? பொருள் இல்லாமல் சொல் தோன்றியிருக்க முடியாதே! தொல்காப்பிய நூலில்

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ”

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளாரே! எல்லாச் சொற் களுமே பொருள் உடையன; குறிப்பிட்ட ஒரு பொருள் இல்லாமல் ஒரு சொல் தோன்ற முடியாது-என்பது இந் நூற்பாவின் கருத்து. எனவே, கடவுள் என்னும் ஒரு சொல் இருப்பதனால், அச்சொல்லால் குறிக்கப்பெறும் ஒரு பொருள் இருந்தே தீரவேண்டும்-என்ற வாதம் ஈண்டு எழுவது இயல்பே. இஃது உண்மைதான்! கடவுள் என்னும் பொருள் உண்டுதான்! ஆனால் அது கற்பனைப் பொருள் ஆகும்; மக்களால் இடையே படைக்கப்பட்ட பொருள் ஆகும்.


  1. தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-பெயரியல்-1