பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
117
 


உண்டு. தமிழ் மொழியில் சில சொற்களில் (ழ) ழகரமா யிருப்பது, அதன் உடள் பிறப்புத் திராவிட மொழிகளாகிய கன்னடத்தில் (ள) ளகரமாகவும் தெலுங்கில்’ (ட) டகரமாகவும் ஒலிக்கப்படுவது ஆட்சியில் உள்ளது. தமிழில் உள்ள ஏழு என்பதைக் கன்னடத்தில் ஏளு, எனவும், தெலுங்கில் ஏடு” எனவும் ஒலிப்பர் மற்றும். தமிழில் உள்ள கோழி என்பதைக் கன்னடத்தில் கோளி எனவும், தெலுங்கில் கோடி எனவும் ஒலிப்பர். இவ்வாறே தமிழில் உள்ள கூழு உன்பதைக் கன்னடத்தில் ‘கூளு’ எனவும் தெலுங்கில் கூடு” எனவும் ஒலிப்பர். தெலுங்கு அறிஞராகிய வேமன்னர் என்பவர், தம் ‘வேமன்ன பத்தியம் என்னும் நூலின் பாடல்களில், கூடு (கூழு) என்னும் சொல்லைச் சிறப்பான உணவு என்னும் பொருளில் ஆண்டுள்ளார். பாடல் பகுதிகள் தமிழ் எழுத்தில் வருமாறு:-

“பப்பு லேனிகூடு பருலக ஸ்ஹயமெள
யப்பு லேணி வாடு யதிக பலுடு”

(அன்ன ரசம்-467)


என்பது ஒரு பாடலின் பகுதி. இதன் கருத்து. பருப்பு இல்லாத உணவு அயலவர்க்கு (இடப்படுதல்) ஆகாத தாகும்; கடன் இல்லாத மாந்தன் மிகவும் வல்லவனா வான்-என்பதாகும். மற்றுமொரு பாடல் பகுதி யினைக் காண்போம்:

“நெய்யி லேனி கூடு கிய்யான கனுவதி
ப்ரியமு லேனி கூடு பிண்டபு கூடயா”

(அன்ன ரசம்-469)


இதன் கருத்து நெய் இல்லாத உணவு ஒழுங்கற்றதாகும்; அன்பு இன்றி இடும் உணவு, பிண்டச் சோற்றுக்கு இணை யாகும்’-என்பதாகும்.