பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


படுத்தப்படுகிறது. பொங்கித் தின்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை கிடையாது’, ‘நான்தான் அவர்களுக்குப் பொங்கிப் போடுகிறேன்-என்னும் வழக்காறுகளில் உள்ள பொங்கி’ என்பது. சிறப்பு உணவு செய்தலையே குறிக்கிறது. பண்டு, சிறப்பு நாள்களில். கூழ் குடித்தலையும் கஞ்சி குடித்தலையும் நிறுத்தி, சோற்றைப் பொங்கித்தின்றனர். இன்றைய பொங்கல் விழாப் படையல், பழைய அடிப்படையில் எழுந்ததேயாகும்.

ஆண்டுதோறும் தைத்திங்களின் முதல் நாளில், இந்திய மக்களுள் பலர், ஏதாவது ஒரு பெயரில் ஒருவிழா எடுக்கின்றனர். தமிழர்கள் அன்றைக்குப் பெரும் பொங்கல் விழா என்று பெயரிட்டுப் படையல் செய்கின்றனர். இந்தப் பொங்கல் நாளன்று, சோற்றை வடிக்காமலோ அல்லது தண்ணிரைச் சரியாக நிறை கட்டி வைத்துச் சோற்றை நெற்றுப் பதமாக எடுக்காமலோ, சோற்றைக் கட்டியும் முட்டியும் ஆகப் பொங்குகின்றனர். வீட்டில் புதிய உலோகக் கல வகைகள் (பாத்திரங்கள்) எவ்வளவு இருப்பினும் அவற்றை விலக்கி, பழைய வழக்கப்படி புதிய மண்பாண்டங்கள் வாங்கி வந்து அவற்றிலேயே பொங்குகின்றனர்-குழம்பிடுகின்றனர். பண்டைக்கால மக்களுக்கு முதலில் புழுங்கல் அரிசி தெரிந்திருக்க முடியாது; பச்சை நெல்லைக் குத்தி எடுத்த பச்சை அரிசியே தெரிந்திருக்க முடியும்; நாளடைவிலேயே நெல்லைப் புழுக்கிப் புழுங்கல் அரிசி உண்டாக்கியிருப்பர். எனவே, பண்டைய மக்கள் அனைவரும் தொடக்கத்தில் பச்சையரிசியையே பொங்கித் தின்றிருப்பர். இந்தத் காலத்தில் புழுங்கல் அரிசியே உண்ணும் பெரும்பாலான தமிழர்கள். பெரும் பொங்கல் விழா நாளில், பண்டைக் கால வழ்க்கப்படி, பச்சையரிசியையே இட்டுப் பொங்கு கின்றனர். அந்தக் காலத்தில், குடியிருப்பு வசதி இன்மை யாலும், இது பெரிய படையல் ஆதலாலும், பெரும்