பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மக்களாய்ப் பிறந்து வாழ்ந்தவர் என்பதை மறந்துவிட முடியாது. இந்து மதத்தில், கன்னிமார், இயக்கி, காட்டேறி, இருசியம்மா-இருசியாத்தா, இரிசப்பன், சாத்தான், மாடசாமி, பாவாடை சாமி-பாவாடை ராயன் - பாவாடை, இடும்பன், மதுரை வீரன், முனியன், முனியண்டி-முனிசுவரன், மன்னார் சாமி, மாரி சாமி, காத்தவராயன் முதலியோர் சிறு தெய்வங்கள் எனப்படுவர். இவர்கட்கெல்லாம் சிலை வைத்தும் கோயில் எடுத்தும் வழிபாடு நடைபெறுகிறது. இவர்கள்,எல்லாரும் மக்களாய் வாழ்ந்து கடவுளாக மாறினவர்களே! மக்களாகிய இவர்கள் தெய்வங்களாக மாறினமை பற்றிய வரலாறுகன் பல உண்டு. ஈண்டு விரிப்பின் பெருகும். மதுரைவீரன் வரலாறு திரை ஒவியமாக (சினிமாவாக) எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள், மனித வீரன் ஒருவனே ‘மதுரை வீரன்’ என்னும் தெய்வமானான் என்பதை நன்கறிவர்.