பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


மேற்கூறிய மூன்று நிகழ்ச்சிகளையும் அறியும்போது மிக்க வியப்புணர்வு தோன்றுகிறது. கிரேக்க டயோனியசுக்கும் திருவொற்றியூர்த் துறவிக்கும் மனிதர்கள் மனிதர்களாகத் தெரியவில்லை. அதனால், அவர்கள் மனிதரைத் தேடுகிறேன் என்றும், நாய் போகிறது-நரி போகிறது என்றும் கூறியிருக்கின்றனர். இச்செய்திகளை அறியும்போது, ட்யோனியசும், ஒற்றியூர்த் துறவியும் உயர்ந்த உண்மைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார்கள் என அவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது; பலர் அவர்களைப் பாராட்டவும் செய்கின்றனர்.


இங்கே நான் சொல்வது என்ன? டயோனியசும் ஒற்றியூர்த் துறவியும் கூறிய கருத்து தவறானது; அவர்கள் உண்மையை உரைக்கவில்லை; பொய்யான கருத்தையே புகன்றுள்ளனர் என்பது என் கருத்து. இதற்கு உரிய விளக்கமாவது:-

கிரேக்க டயோனியசு உண்மையான மனிதர்கட்கு நடுவில் இருந்துகொண்டே, அவர்களை மனிதர்களாகப் புரிந்துகொள்ள முடியாமல், மனிதர்களைத் தேடுவதாகப் பொய்யான கருத்து புகன்றுள்ளார். ஒற்றியூர்த் துறவியும் உண்மையான மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாமல் விலங்குகள் எனத் தவறான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.


யான் இவ்வாறு கூறுவது சிலர் அல்லது பலர்க்குத் திகைப்பாயிருக்கலாம். நான் சொல்லுவது என்ன? மனிதன் அயோக்கியன். அவன் இப்போது செய்யும் ஊழல்களை அப்போதும் செய்தான்-இனியும் எப்போதும் செய்ய இருக்கிறான். நல்ல பாம்பு எப்போதும் நல்ல பாம்பே மனிதன் எப்போதும் மனிதனே ஒரு நல்ல பாம்புக்கு நஞ்சு இருக்கிறதெனில், எல்லா நல்ல