பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154
 


மாயோன்-திருமால். பங்கயன் - பிரமன். சினன்-சைனர் கடவுள். புத்தன் பெளத்தர் கடவுள். இந்த ஐவரையுமே மண்டல புருடர் சமனாக ஒரே ஏரில் கட்டியுள்ளார். இவர்களுள் சிவன் பிறப்பால் முற்பட்டவர் எனவும் புத்தர் பிறப்பர்ல் பிற்பட்டவர் எனவும் கொள்ளல் தகும், சைன சமயத்தவராகிய மண்டல புருடர், நடுநிலை பிறழாது, கால (Seniority) முதன்மையின்படி பட்டியல்படுத்தியுள்ள அழகு பாராட்டத்தக்கது. சினனுக்குப் பிற்பட்டவரே புத்தர் என்பது வரலாறு. இவர்களைப் போலவே அரும்பெருஞ் செயல்கள் புரிந்த பெரியார்களைக் கடவுளாக வழிபடும் மரபு இன்று வரையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இற்றைக்கு (1988) முன்னே சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர்களாகிய நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களுக்கும், ஆழ்வார்கள் எனப்படும் வைணவ அடியார்களுக்கும், கோயில்களில் சிலை வைத்து வழிபாடு செய்து வருவதை மக்கள் அறிவர். வேறு சில மதங்களிலும் இம்மரபு உண்டு.


சிலைவைக்கும் வழக்கம்:

கடவுள் அடியார்கட்கும் அரசர்கட்கும் அவர்கள் இறந்தபின் சிலை வைக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இக்காலத்தில், இலக்கியம், நுண்கவின் கலைகள், அரசியல், சமூகப் பணி முதலியவற்றுள் எந்தத் துறையில் அரும்பெருஞ்செயல் புரிந்தவர்க்கும் சிலை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

அக்காலத்தில் ஒருவர் இறந்த பின்பே அவருக்குச் சிலை வைக்கப்பட்டது. இக்காலத்திலோ, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே வைக்கும் அளவுக்குச் சிலை வைக்கும் வழக்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்