பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
 


என்பர் சிலர். இதையே சிலர், கடவுள் உயிர்கள் உய்யத் தனு, கரண, புவன, போகங்களைக் கொடுத்தார்-என்பதாகக் கூறுவர். (தனு = உடம்பு; கரணம் = மனம் முதலிய உட்கருவிகள்; புவனம் = உலகம் ; போகம் = உயிர்கள் துய்க்கும் பல்வேறு இன்பங்கள்-இன்பப் பொருள்கள்.)

கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கிறார்; பின் காக்கிறார்; பின்பு அழித்து மறைக்கிறார்; பின் நல்லவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்; நல்லவர் அல்லாதவரை நரகத்தில் தள்ளிக் கொடுமைகளைத் துய்க்கச் செய்து பின் மீண்டும் உலகுக்குக் கொண்டு வருகிறார்; பின்னர் அவர்கள் நல்லன செய்து நல்லவர்கள் ஆனதும் கடவுள் அவர்களையும் தம்மோடு சேர்த்துக் கொள்கிறார்- (அஃதாவது, மாணாக்கன் ஒருவன் மூன்றாண்டுகள் ஒரு வகுப்பிலேயே கிடந்து பிறகு நன்கு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று மேல் வகுப்புக்கு மாறுவது போல-) என்பது ஒருவகைக் கருத்து.

தண்ணீர் கடலிலிருந்து ஆவியாக மேலெழுந்து முகிலாகிப் பின்னர் மழையாகப் பெய்து ஆறுகளின் வாயிலாக மீண்டும் கடலை அடைவது போல, உயிர்கள் கடவுளிடமிருந்து தோன்றி உலகில் உழன்று மீண்டும் கடவுளையே அடைகின்றன-என்பது ஒரு பெரிய நூற் கருத்து. (எந்த நூலையும்-யாரையும் எந்தப் பிரிவினரையும் குறிப்பிடாமலேயே இங்கே செய்திகள் தரப்படுகின்றன.)

கடவுள் உயிர்களைப் பிறப்பித்து அவற்றுக்காகத் தனு கரண புவன போகங்களைக் கொடுத்ததோடு மன நிறைவு கொள்ளாமல், இடைவிட்டு இடைவிட்டுச்