பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. படைப்புக் கொள்கை ஆய்வு

பெற்றோரும் பிள்ளைகளும்

கடவுளே எல்லாம் படைத்தார் என்னும் படைப்புக் கொள்கையே சரியானது என்று சொல்வதனால், இந்நூலில் முன்பு கூறியுள்ளாங்கு, கடவுள் ஏன் உலகங்களையும் உயிர்களையும் படைக்க வேண்டும்? அதிலும் இத்தனை வகை உயிர்கள் எதற்குத் தேவை? இதன் உண்மையான நோக்கம் என்ன? இந்தப் பூவுலகில்தான் உணவு நெருக்கடியும் இட நெருக்கடியும் மற்ற நெருக்கடிகளும் உள்ளனவே! இந்த நெருக்கடிகளைக் குறைக்கச் சில கோடி உயிர்களையாவது நிலா உலகில் (சந்திர மண்டலத்தில்) படைத்துச் சிக்கலுக்குத் தீர்வு கண்டிருக் கலாமே! நிலா உலகில் காற்றையும் தண்ணீரையும் உண்டாக்காதது ஏன்? அதன் மேல் ஏதேனும் சினமா?— அல்லது வெறுப்பா?

பூவுலசில் இவ்வளவு உயிர்களைப் படைத்தாரே—அவற்றையெல்லாம் நன்முறையில் காப்பாற்ற முடிகிறதா? சூது-வாது, பகை-வெறுப்பு, கொலை—கொள்ளை, வறுமை-பிணி, பசி-பற்றாக் குறைகள் இன்னபிற தொல்லைகள் எத்தனையோ-எத்தனையோ! கடவுள் சிலைகளையே மக்கள் திருடி விற்றுப் பிழைக்கும்