பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


அறியாமைப் பிதற்றல்

ஏழைகளின் வறுமையைப் போக்கவும் பிணியாளரின் பிணிகளை நீக்கவும் பல்வேறு துன்பங்களில் உழல்வோரின் துன்பங்களைப் போக்கவும் மக்களுக்கு மக்கள் தாமே உதவி செய்து கொள்கின்றனர்? இங்கே கடவுள் என்ன செய்கிறார்? “கடவுள், மக்கள் சிலரைக் கொண்டு மற்ற மக்களுக்கு உதவி புரிகிறார்-மேலும் தம் பேராளர்களை (பிரதிநிதிகளை) மேல் உலகத்திலிருந்து பூவுல கிற்கு அனுப்பி உதவி செய்ய வைக்கிறார்-என்றெல்லாம் பிதற்றப்படுகிறது. அங்ஙனமெனில், பிணியும் வறுமையும் இன்னபிற துன்பங்களும் வருவதனால்தானே கடவுள் பிறர் வாயிலாக அவற்றைப் போக்க வேண்டியுள்ளது? இந்தத் துன்பங்கள் எல்லாம்-ஏன்?-எந்தத் துன்பமுமே உயிர்கட்கு வராதவாறு கடவுள் உலகத்தைப் படைத்தால் அவருக்கு என்ன இழப்பு (நஷ்டம்) வந்து விடும்? அவர் தாம் எல்லாம் வல்லவராயிற்றே.

துன்பம் ஒரு சிறிதும் இல்லாத=இன்பமே நிறைந்த உலகத்தை ஏன் அவர் படைக்கலாகாது? துன்ப உலகைப் படைத்து விட்டுப் பின்னர்ப் பேராளர்களை அனுப்பித் துன்பங்களைப் போக்க முயல்வது, குழந்தையைக் கிள்ளிவிட்டுப் பின்னர்த் தொட்டிலை ஆட்டுவது போலல்லவா இருக்கிறது? அப்படியே பிறர் வாயிலாக அல்லது தம் பேராளர் (பிரதிநிதிகள்) வாயிலாக உலகத் துன்பங்களை இன்று வரையிலும் நூற்றுக்குக் கால்பங்கா வது கடவுளால் போக்க முடிந்ததா? சில நோய்கள் பரவாமல் தடுக்கவும் சில நோய்களை அறவே அகற்றவும் அறிவியல் மக்கள் (Scientist) முயல்கின்றனரே-அம் முயற்சியில் வெற்றியும் காண்கின்றனரே! இந்தியப் பெரு நாட்டில் பெரியம்மை நோய் அறவே அகற்றப்பட்டு விட்டதே! அதுபோல், கடவுள் உலகில் துன்பங்களே