பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41
 


வாங்கினதாகக் கூறப்படும் வரலாறு பலரும் அறிந்ததேசிறையிலும் அடைக்கப்பட்டனர் அவர்கள்.


அவதார மாந்தனரப் பெற்ற தாய், தன் சொந்தக் கணவருடன் உடலுறவு கொள்ளாமல் பிள்ளை பெற்றாள் என்பது நூற்றுக்கு நூறு பொய்க்கூற்று. தன் சொந்தக் கணவருடன் உடலுறவு கொண்டே, அவதார மாந்தர் எனப்படும் உயர்ந்த பிள்ளையைத் தாய் பெற்றாள் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை. ஊசி மருந்து மூலம் கருவுறச் செய்வது இந்தக் காலத்து அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பா யிருக்கலாம்; ஆனால் இந்தகைய அறிவியல் முன்னேற்றம் அந்தக் காலத்தில் இல்லையே. அவதார மாந்தர் எனப்படும் உயர்ந்த பிள்ளையைத் தாம் தம் மனைவியோடு உடலுறவு கொண்டு பெற்ற தந்தையார் இப்போது உயிரோடு இருப்பாராயின், தாம் உடலுறவு கொண்டதால் அப்பிள்ளை பிறக்கவில்லை என்று கூறும் மதவாதிகளை மிகவும் கண்டிப்பார். எனவே. அவதார மாந்தர்க்குத் தெய்வத் தன்மை ஊட்டுவதற்காக, அவரைப் பெற்ற உண்மைத் தந்தையாரை அத்தொடர்பினின்றும் விலக்கி வைப்பது மன்னிக்க முடியாத மாபெருங் குற்றமாகும். என்மேல் சினங்கொள்ளாமல் அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும்; இனிமேலாவது இந்த மாபெருந் தவறைத் திருத்திக் கொள்ளவேண்டும்.


மனிதத் தந்தையின் தொடர்பில்லாமல், கடவுளே மனிதத் தாயின் வயிற்றில்வந்து புகுந்து மனிதக் குழந்தையாக அவதாரம் செய்து, அரும் பெரும் செயல்கள் பல புரிந்தார் என்று கூறுவதால் மக்கள் இனத்திற்கு இன்னொரு பெருங்கேடு-பேரிழப்பு உள்ளது. இதற்கு விளக்கம் வருமாறு:-