பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


எனவும் நாத்திகர் பற்றிக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திகத்தோடு நாத்திகமும் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்து வருகிறது எனலாம். அவ்வளவு ஏன்? சுமார் இர்ண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, திருவள்ளுவர், கடவுளை வணங்காவிடின் கற்றதனால் பயனில்லை என்று கூறியுள்ளார்.

(4) “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
கற்றாள் தொழாஅர் எனின்.’


என்பது அவரது பாடல். இஃதும் நாத்திகரையே சுட்டுகிறது. மிகப் பழைய வட மொழி வேதத்திலேயே நாத்திகர் பற்றிய குறிப்பு உள்ளது.

(1) திருவாசகம்-போற்றித் திருவகவல்-47
(2) சைவ சமய நெறி-பொது. 408-உரை
(3) காஞ்சிப் புராணம்-கழுவா. 208
(4) திருக்குறள்-பாயிரம்-கடவுள் வாழ்த்து-2.

மக்கள் தோன்றிய தொடக்கக் காலத்தில் அஃறிணை உயிரிகள்போல் அவர்கள் வாழ்ந்த காலத்தில்-காட்டு மிறாண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் அவர்களிடையே, இப்பொழுது உள்ளது போன்ற கடவுள் கொள்கை இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், கடவுள் கண்ணுக்குத் தெரிய வில்லை யாதலின்-வேறு பொறி புலன்களாலும் உணர முடியவில்லையாதலின் கடவுள் என்ற உணர்வு ஒரு சிறிதும் தொடக்கக் காலத்தில் இருந்திருக்க முடியாது. அவ்வளவு ஏன்? இப்போதும் பத்துக் குழந்தைகளைத் தனியிடத்தில் வைத்து, கடவுளைப் பற்றிய அறிமுகமே செய்து வைக்காமல் வளர்த்து வருவோமேயானால், அவர்கள் இறுதிவரையும் கடவுளைப் பற்றி எண்ணவே