பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47
 


நடைபெறாததால், கடவுள் என ஒரு பொருள் இருப்ப தாக நம்புவதற்கு இல்லை. எனவே, கடவுள் பெயரால் கூறப்படுவனவெல்லாம் கட்டுக் கதைகளே-மூட நம் பிக்கைகளே. கடவுள் பெயரால் செய்யப்படும் செயல்கள் யாவும் வீண் முயற்சியே. கடவுள் பெயரால் செய்யப்படும் செலவுகள் அத்தனையும் வெறும் பாழே. எனவே, மக்கள் இனத்திற்கு இந்த வீண்சுமை வேண்டியதேயில்லை - என்பதாக, இன்னும் பலவாறாக நாத்திக வாதம் பேசப்படுகிறது.


ஆத்திக வாதம்

மேற்கூறிய நாத்திக வாதத்தை மறுத்து ஆத்திகக் கொள்கையை நிலைநாட்டி நிமிர்த்த, எவ்வளவோ சப்பைக் கட்டு-சிம்புக் கட்டு-மாவுக் கட்டு எல்லாம் ஆத்திகர்களால் கட்டப்படுகின்றன. அவர்களின் வாதமாவது:-கடவுள் ஒருவர் உறுதியாக உண்டு. அவரே உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். அவர் அருளாலேயே எல்லாம் இயங்குகின்றன. அவர் இன்றி ஒர் அணுவும் அசையாது. கடவுளை வழிபடுவோரே புண்ணியவான்கள்-அவர்கட்கே எல்லா நன்மைகளும் கிடைக்கும். அவரை வழிப்டாதோர் பாவிகள் இவர்கள் நன்மையொன்றும் பெறுதல் அரிது. கடவுள் உயிர்கட்கு உடம்பைத் தந்தது அவரை வழிபட்டு அவரை அடைவதற்கேயாம். அவரை வழிபடுவோரே பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து வீடுபேறாம் உயர் கரையை அடைய முடியும்; அல்லாதார், பல பிறவிகள் எடுத்து இந்த உலகத்திலேயே உழன்று கொண்டு கிடக்க வேண்டியதுதான். * கடவுளுக்குப் பிறப்பும் இல்லை - இறப்பும் இல்லை; அவர் அனாதி. கடவுள் எல்லாம் வல்லவர்; எல்லாம் அறிந்தவர்; எங்கும் நிறைந்தவர்-எதிலும் நிறைந்தவர்;