பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


அளவைகள்

ஆத்திகர்கள் சுற்றிவளைத்து ஒரு கருத்து சொல்வர். அன்பு என்னும் பண்பு தனியுருவமாகக் கண்ணுக்குத் தெரியவில்லைதான்-மற்ற பொறி புலன்களாலும் அறியப்படவில்லைதான். ஆனால், தாய் தன் சேய்க்குச் செய்யும் அரிய பெரிய உதவிகளைக் காணுங்கால். அன்பு என ஒன்று உள்ளது எனக் கருத்தினால் உணரமுடிகிறது. ஒருவர் நோயினால் மிகவும் துன்புற்றாலோ-இறந்து விட்டாலோ, அவரைச் சேர்ந்தவர்கள் விடும் கண்ணீரைக் கொண்டு, அன்பு என ஒன்று உள்ளது எனக் கருத தினால் அறிய முடிகிறது. இவ்வாறே பொறாமை, சினம், இரக்கம் முதலிய பண்புகளையும் தனித்தனி உருவமாகக் கண்ணால் காண முடியாவிடினும்-மற்ற பொறி புலன்களாலும் உணர முடியாவிடினும், அன்புக்குச் சொன்ன செயல்களைப் போன்ற தொடர்புடைய செயல்களைக் கொண்டு கருத்தினால் அறிய முடிகிறது.


இவ்வாறு, பொறி புலன்களால் அறிய முடியாமல் கருத்தினால் அளந்து நுனித்து (யூகித்து-அனுமானித்து) அறிவதற்குக் கருத்தளவை’ என்று பெயர் வழங்குவர். இதனை அனுமானப் பிரமாணம் என்னும் பெயரால் வடமொழியில் வழங்குவர். தனியுருவமாகக் கண்ணுக்குத் தெரிவதைக் காட்சியளவை எனத் தமிழிலும் பிரத்தியட்சப் பிரமாணம் என வடமொழியிலும் வழங்குவர். நூல்களைப் படிப்பதன் வாயிலாகத் தெரிந்து கொள்வதற்கு நூல் அளவை எனத் தமிழிலும் ‘ஆகமப் பிரமாணம்’ என வடமொழியிலும் பெயர் வழங்குவர்.


இந்த மூவகை அளவைகளுள் நூல் அளவையைக் கொண்டு-நூல்களைப் படித்த அறிவு கொண்டு கடவுள் உண்மையை நம்பிவிட முடியாது கண்ணுக்குத் தெரியாததால் காட்சியளவை கொண்டும் கடவுள் உண்