பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


மையை ஒத்துக்கொள்ள வியலாது. ஆனால், நெருப்பின்றிப் புகையாது-புகைவதைக் கொண்டு நெருப்பு உண்மையை நம்பமுடிகிறது; காரணம் இன்றிக் காரியம் நிகழாது-காரியம் நிகழ்ந்திருப்பதைக் கொண்டு காரணம் ஒன்று உண்டு என்பதை ஒத்துக்கொள்ள முடிகிறது, இவை போலவே, உலகங்களும் உயிர்களும் தோன்றியிருப்பதைக் கொண்டு அவற்றைத் தோற்றியவர் ஒருவர் (கடவுள்) இருப்பது உண்மை என அனுமானத்தால் கருத்தளவையால் கடவுள் உண்மையை நம்பவேண்டும் என ஆத்திகர்கள் அடித்துக் கூறுகின்றனர். நூல் அளவையையும் கருத்தளவைக்குள் (அனுமானப் பிரமாணத்துக்குள்) அடக்கிவிடலாம்; நூல்களைப் படிப்பதன் வாயிலாகவும் ஒன்றை அனுமானிக்கலாம் அல்லவா? எனவே கண்ணுக்குத் தெரியவில்லை என்பதைக் கொண்டு கடவுள் இல்லை எனக் கூறமுடியாது; கருத்தளவையைக் கொண்டு கடவுள் உண்மையை நம்ப வேண்டும்-காரண காரிய வாதத்தின்படி கடவுள் உண்மையை ஒத்துக்கொள்ள முடியும் என்பது ஆத்திகரின் வாதம்.


சரி-ஆத்திகர்களின் காரண காரிய வாதத்தையே ஒத்துக்கொள்ளலாம்-அஃதாவது, காரணம் இன்றிக் காரியம் நிகழாது -நெருப்பின்றிப் புகையாது-கொத்தனார் இன்றிக் கட்டடம் உருவாகாது-மூலகாரணர் ஒருவர் (கடவுள்) இல்லாமல் உலகங்களும் உயிர்களும் உண்டாகியிருக்க முடியாது-என்ற காரண காரிய வாதத்தை ஒத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த் வாதத்தின்படி நோக்குங்கால், தமக்கு மூலகாரண்ர் ஒருவர் இல்லாமல் கடவுள் எவ்வாறு உண்டானார்? கடவுளுக்கு மூல காரணமாயிருப்பது-தோன்றுவதற்கு மூல காரணமாயிருப்பது எது? இந்த மூல காரணத்துக்கு மூல காரணம் எது?-என்று வினாக்களை அடுக்கிக்