பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
 


எடுத்துக் கொள்ளக் கூடாது; இவையாவும், சிறுபிள்ளைகள் தெருவில் என்னென்னவோ விளையாடுவதைப் போல, பெரிய பிள்ளைகள் (ஆத்திகர்கள்) கடவுள் பெயரால் விளையாடும் ஒருவகைப் பெரிய விளையாட்டுகளேயாகும். இவையெல்லாம் கடவுள் துறையின் வளர்ச்சியாக மாட்டா.


இந்த வேடிக்கை விளையாட்டுகளை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். உண்மையான கடவுள் துறை வளர்ச்சியாவது:- கடவுள் அந்தக் காலத்தில் அங்கே அவருக்குக் காட்சிதந்தார்- இந்தக் காலத்தில் இங்கே இவருக்குக் காட்சி கொடுத்தார் - எந்த எந்தக் காலத்திலேயோ எங்கே எங்கேயோ எவர் எவருக்கோ காட்சியளித்தார் - என்றெல்லாம் கதையளக்கிறார்களே - அந்தக் காட்சி தரும் கடவுள் செயல் எப்போதும் நடந்து கொண்டிருக்க வேண்டும்.


ஒரு காலத்தில் பதின்மருக்குக் காட்சியளித்தார் எனில், பின்னர் நூற்றுக் கணக்கானவர்க்கும் அதன் பின்னர் ஆயிரக் கணக்கானவர்க்கும் அதன் பிறகு நூறாயிரக் கணக்கானவர்க்கும், பின்னர்ப் பின்னர்க் கோடிக் கணக்கானவர்க்கும் கடவுள் காட்சியளித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இவ்வாறு நடப்பதே, கடவுள் துறையின் உண்மையான வளர்ச்சியாகும். உலகில் மற்ற மற்ற துறைகள் எல்லாம் மேன்மேலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, கடவுள் காட்சியளிப்பது மட்டும் ஏன் வளரவில்லை - ஏன் வளரக்கூடாது? உண்மையில் கடவுள் என ஒரு பொருள் இருந்து யாருக்காயினும் உண்மையில் காட்சி கொடுத்திருந்தால் அல்லவா, அந்தக் காட்சி இந்தக் காலத்தும் கோடிக் கணக்கானவர்க்குக் கிடைக்கும்? இல்லாத பொருளைப் பற்றிப் பேசி என்ன