பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
57
 


பயன் காணமுடியும்? உண்மையான அன்பு (பக்தி) இருந்தால் அல்லவா கடவுளைக் காண முடியும் என்று கதைப்பவர்கள், போகாத ஊருக்கு வழி சொல்பவர் ஆவார்கள்! அப்படியே வைத்துக் கொள்வோம், மற்ற துறைகள் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அந்த உண்மையான அன்பும் வளர வேண்டியதுதானே? என்மேல் சினம் கொள்ளக்கூடாது; சிந்திக்க வேண்டும். ஆமாம்-நன்கு ஆர அமரச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


காத்திகச் சார்பு

மேற் கூறியவற்றிலிருந்து, ஆத்திகவாதம் உண்மையானதன்று: நாத்திக வாதமே உண்மையானது - பொருத்தமானது என்பது புலப்படும். இது சார்பாக இன்னும் சில சொல்ல வேண்டியுள்ளது. புத்தர் பெருமானையே நாத்திகர் எனப் புகலும் ஆத்திகர்கள் உள்ளனர். புத்தர், கடவுள் பற்றியும் பூசனை-நோன்பு -வழிபாடு பற்றியும் விவரிக்கவில்லை; இறுதியில் அடைவதாகச் சொல்லும் வீடுபேறு (மோட்சம்) பற்றியும் அவர் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை: நல்லொழுக்க நன்னெறிகளைப் பற்றியே அவர் பெரிதும் வற்புறுத்தினார். நல்லொழுக்க நன்னெறிகளைப் பற்றி இந்தக் காலத்துச் சமூகச் சீர்திருத்தக்காரர்களும் வலியுறுத்துகின்றனர் அல்லவா? இக்கொள்கை காரணமாக ஆத்திகர் சிலரால் புத்தர் நாத்திகர் எனப் புகழப்படுகிறார்.


புத்தரைப் போலவே ஆதி சங்கரரையும் நாத்திகர் என நவில்பவர் உளர், இவர்கள், ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையை நாத்திகம் என நவில்வதும் உண்டு. அத்வைதம் என்ற சொல்லுக்கு ‘இரண்டு அற்றது’ (அஃதாவது ஒன்றே) என்பது பொருள் ஆகும். கடவுளும் உயிர்களும் வேறல்லர்; பொன்னும் பணியும்