பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


கொள்ள முடியாத ஒருவகை இயற்கையின் திருவிளை யாடலேயாகும் என்பது வெளிப்படை.

கடவுள் என ஒருவர் இல்லை என்பதைப் பெரும்பாலார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; அது மட்டுமா? இல்லையென்பவர்மேல் சினம் கொள்வர் -பகையுணர்வு கொள்வர். கடவுள் என ஒருவர் இல்லையென்பதனால் என்போன்றோர்க்கு எந்த நன்மையும் இல்லை; மாறாகச் சமூகத்தின் பகையும் பழிப்புமே பயனாகக் கிடைக்கும். கடவுள் இருப்பது உண்மையானால், அவர் வேண்டா என்று கூறவில்லை. தாராளமாக மேள தாளத்தோடு கடவுள் இருக்கட்டும்! உலகத்துக்கு -உயிர்கட்கு அவர் நன்மைகள் பல புரியட்டும்! போட்டி-பொறாமை, பகை-போர், பிணி-வறுமை, பசி-பஞ்சம், கொலை-கொள்ளை, சூது-வாது, கள்ளம்-கபடு, ஏமாற்று - பித்தலாட்டம் முதலிய கேடுகள்-தீமைகள் இல்லாதபடி உலகை நடத்தட்டும்! கடவுள் முயன்றால்தான் எல்லாம் முடியுமே! ஒரு வகைத் துன்பமும் இல்லாமல் உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றட்டும்! தம்மை வழிபட்டால்தான் நன்மை புரிவது என்று கைம்மாறு (இலஞ்சம்) வேண்டாமல், வழிபடுபவர்-அல்லாதார் அனைவரையும் நல்லவராக்கி, சரி நிகராக அனைவருக்கும் நன்மை புரியட்டும்! தீவினை புரிபவருக்கு நரகம்-நல்வினை செய்வோர்க்குச் சொர்க்கம் என்ற பாகுபாடின்றி, அனைவரையுமே உயர்செயல் புரியச் செய்து அனைவருக்குமே வீடுபேறு அளிக்கட்டும்! வேண்டா என்று சொல்லவில்லை. இவ் வாறு செய்வதானால், உலகில் ஒரு'கடவுள் என்னஎத்தனை கடவுளர்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும்! அத்தனை கடவுளர்களையும் வரவேற்போம்வணங்குவோம்-வாழ்த்துவோம்! ஆனால் இங்கே நமது கவலையெல்லாம், மேற்கூறியவாறு செய்யக் கூடிய கடவுள் ஒருவர் கூட இல்லையே என்பதுதான்!