பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


கருத்து ஒற்றுமை காண்டல்

இங்கே, கருத்து ஒப்புமை காண்டல்’ என்ற முறை யில் இங்கர் சால் (R.G. Inger Sol) என்னும் அறிஞர் அறிவித்துள்ள கருத்துகளைக் காணலாம்:


“மேலே இருந்து உதவி நாடுவதை மக்கள் விட்டு விடவேண்டும். நம் முறையீட்டைக் கேட்கக் கடவுளுக்குக் காதும் இல்லை-உதவி புரியக் கையும் இல்லைஎன்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பகுத்தறியும் அளவில், இயற்கை என்பவள், மன மாறுபாடு இன்றியும் நோக்கம் ஏதும் இன்றியும் எப்போதும் உலகப் பொருள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் அவ்வுருக்களை மாற்றவும் செய்கிறாள்-மீண்டும் மீண்டும் மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அழுகையும் இல்லை-மகிழ்ச்சியும் இல்லை. அவள் நோக்கமின்றி மாந்தரைப் படைக்கிறாள்-இரக்கம் இன்றிப் பின்பு அழித்தும் விடுகிறாள். நல்லவர்-கெட்டவர், அமிழ்தம்-நஞ்சு, இன்பம்-துன்பம், வாழ்வுசாவு, கலகலத்த சிரிப்பு-கண்ணிர்-ஆகிய யாவும் அவளுக்கு ஒரே நிகரானவை. அவள் இரக்கம் உடையவளும் அல்லள்-கொடுமை உடையவளும் அல்லள். வாழ்த்துதலால் அவளை வயப்படுத்தவும் முடியாது கண்ணீரால் அவளைக் கரைத்து உருக்கவும் முடியாது. பாம்புகளின் பற்களில் உள்ள நஞ்சுக்கும் மாந்தரின் உள்ளத்தில் உள்ள இரக்கத்துக்கும் அவள் வேறுபாடு கொள்வதில்லை.

கடவுள் வணக்கமும் வழிபாடும் செல்வத்தையும் செழிப்பையும் உண்டாக்குவதில்லை. இயற்கைக்கு மேல் (கடவுள் என) ஏதோ ஒர் ஆற்றல் இருந்து கொண்டு, கொடுமைக்கு உள்ளானவர்களைக் காத்ததும் இல்லை-உடையும் உணவும் இல்லார்க்கு அவற்றை