பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
 


கடவுள் உள்ளத்துள் உள்ளார் என்பதையும் ஒத்துக் கொள்வதற்கில்லை. உள்ளத்துள் எங்கே இருக்கிறார்உள்ளத்துள் ஏன் இருக்கவேண்டும்-உள்ளத்துள் இருந்து கொண்டு என்ன செய்கிறார். கடவுள் உள்ளத்துள் இருப்பதனால், மக்கள் தீமை செய்யாமல் இருக்கின்றார்களா-எல்லாக் கொடுமைகளையும் புரியும் மக்கள் உள்ளத்துள் மாதேவன் இருப்பதால் ஒரு பயனும் இல்லையே-உள்ளத்துள் கடவுள் உள்ளமைக்கு அடையாளம் என்ன?


கடவுள் நம் உள்ளத்துள் இருந்து கொண்டு எல்லாவற்றையும் சுவனித்துக் கொண்டிருக்கிறார் -எனவே, நாம் தவறு செய்யக்கூடாது-என்று எண்ணி மக்கள் நேர்மையாக நடப்பதற்கு வேண்டுமானால் இந்தக் கருத்து உதவலாம்.