பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


நடக்கும் போது சோர்வுறின், அவருக்கு ஆட்டுக் கால் சாறு (Soup) சமைத்துக் கொடுக்கப்படுகிறது. வேறு உறுப்புகள் சோர்வுறினும் அஃறிணை உயிரிகளின் உறுப்புகள் இம்மாதிரி சமைத்துக் கொடுக்கப்படு கின்றன. இதனால் நேர்ப்பயன் உண்டோ-இல்லையோ! ஆக இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது.


அஸ்தி பஸ்பம்: எனக்கு மூளையில் கட்டி (Brain Tumour) இருந்து குணப்படுத்தப்பட்டது. ‘என் மண்டைக்குள் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) சரியாக வேலை செய்யாததால் சிறிது சிந்தித்தாலும் சிறிது பேசினாலும் தலைவலி-தலைபாரம்-தலை சுற்றல் மயக்கம் எனக்கு உண்டு. ஆசிரியனாகிய யான் பேச முடியாமையால் சம்பள இழப்பு விடுமுறையில் பல திங்கள் வீட்டோடிருந்தேன். ஐரோப்பிய (Allopathy) மருத்துவம் பயன் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்தியச் சித்த மருத்துவர் ஒருவர் எனக்கு அஸ்தி பஸ்பம் என்னும் மருந்து கொடுத்தார். அஸ்தி என்றால் எலும்பு; பஸ்பம் என்றால் தூள். அஸ்தி பஸ்பம் என்பது, ஆட்டு மண்டை, மாட்டு மண்டை, மக்கள் மண்டை முதலியவற்றைத் தூளாக்கிப் பதம் பண்ணிச் செய்த மருந்தாகும். யான் இம்மருந்தை உண்டு, பேசினால் தலை வலிப்பது குணமாகி மீண்டும் ஆசிரியர் வேலையைத் தொடர்ந்தேன். அதன் பிறகு அலோபதி மருத்துவர் கொடுத்த டிரிப்ட னால் (Tryptanol) என்னும் மருந்து மேலும் பயனளித்தது. பேசினால் தலைவலிப்பதை முதலில் குணப்படுத்திய அஸ்தி பஸ்பம்’, ஊனுக்கு ஊன் தரும் மருத்துவ முறையைச் சார்ந்ததெனக் கருதுகிறேன். இந்த அஸ்தி பஸ்பம் பைத்தியத்தையும் குணப்படுத்துமாம். நல்ல வேளையாக எனக்குப் பைத்தியம் இல்லை.