பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77
 


சரி-உயிர் என்னும் ஒன்று, உடம்பினின்றும் வேறுபட்டுத் தனித்து உள்ளது-என்பதாகச் சிலர் கூறலாம். இக்கூற்று சரியானதன்று. உடலுக்கு உயிர் இயந்திரத்துக்கு எண்ணெய் போன்றதாகாது; உடலுக்கு உணவு-நீர்காற்று ஆகியவையே இயந்திரத்துக்கு எண்ணெய் போன்றனவாகும். எனவே, இயந்திரத்தின் இயக்க ஆற்றல் போன்றதான - உடலின் - குறிப்பாக இதயத்தின் ஒருவகை இயக்க ஆற்றலே உயிர் ஆகும் என்பது தெளிவு. ‘இயந்திர மூளை மனிதன் வந்து கொண்டிருக்கிறான் வந்து விட்டான் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.