பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79
 


கால உளவியல் அறிஞர்களின் (Psychologists) கருத்தைக் காணலாம்:


உளம் (மனம்) ஒரு தனிப்பொருள் அன்று; உயிரி (organism) வளர்ச்சி பெறுங்கால் பல படிகளில் காணப் படும் தொழிலே உளம்-வெளியிலிருந்து வரும் தூண்டல் களுக்கு இயையத் துலங்கும் தொழில்களின் தொகுதியே உளம் - என்பது உளவியல் கருத்து. தூண்டல்-துலங்கல் என்றால் என்ன? இந்தக் கருத்தைத் தெளிவு படுத்து வதற்குப் பின்வரும் விளக்கம் தேவைப்படுகிறது:


துண்டல்-துலங்கல்

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும் சுரப்பிகளும் தசையும் தண்டு வடத்தின் (Spinal card) வாயிலாக மூளையோடு தொடர்பு கொள்கின்றன. அவ்வாறே மூளையும் நேராகத் தொடர்பு கொள்ளாமல், தண்டு வடத்தின் வாயிலாகவே பொறிகள், சுரப்பிகள் முதலியவற்றோடு தொடர்பு கொள்கிறது. மூளைக்குக் கீழே தண்டுவடம் உள்ளது. அஞ்சல் நிலையமும் தொலைபேசி நிலையமும் போல, தண்டு வடமானது இடையே இருந்து, பொறிகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து பொறிகளுக்கும் செய்திகளை வாங்கிக் கொடுக்கிறது. எனவே, தண்டுவடத்தை, பல மறிவினைகளின் (Reflexes) இருப்பிடம் எனக் கூறலாம். இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

கையில் ஒரிடத்தில் நெருப்புப் பட்டால், அந்த இடத்திலுள்ள உள்செல்லும் (Afferent) நரம்பு வழியாகச் செய்தி தண்டு வடத்துக்குச் செல்கிறது; அங்கிருந்து அச்செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது; நெருப் பினின்றும் கையை இழுத்துக் கொள்ளும்படி மூளை கட்டளையிடுகிறது; அக்கட்டளையைத் தண்டு வடத்