பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80
 


தின் வழியாக வெளிச் செல்லும் (Efferent) நரம்பு’ கைக்கு எடுத்துச் செல்கிறது; உடனே கை நெருப்பி னின்றும் விலகுகிறது. இது, தண்டு வடம் செய்யும் ஒரு வகை மறிவினை (Reflex) ஆகும். இங்கே நெருப்பு தூண்டல்’ (Stimuius) ஆகும்; கையை இழுத்துக் கொள்வது துலங்கல் (Response) எனப்படும். உள் செல்லும் நரம்புகள் (Afferent Nerves) மூளைக்கு ஐம்புல நுகர்ச்சி கிடைக்கச் செய்வதால் புலன் நரம்புகள்’ (Sensory Netwes) என்றுங் கூடப் பெயர் வழங்கப் பெறும், வெளிச் செல்லும் நரம்புகள் (Efferent Nerves) மூளையிலிருந்து உறுப்புக்களுக்குக் கட்டளையை எடுத்துச் செல் வதால் கட்டளை நரம்புகள் (Connecting Nerves) என்றுங் கூடப் பெயர் வழங்கப் பெறும். இங்கே ஐம்பொறிகளுள் மெய் என்னும் ஒரு பொறியின் ஊறு” என்னும் புலன் தொடர்பான தூண்டல்-துலங்கலை அறிந்தோம். இதேபோன்று வாய், கண், மூக்கு, செவி என்னும் மற்ற நான்கு பொறிகள் (சுவை, ஒளி, நாற்றம் , ஓசை என்னும் புலன்கள்) தொடர்பாகவும் தூண்டலுக் துலங்கல் (Response to Stimulus) உண்டு. எடுத்துக்காட்டுகளாவன:-உணவுப் பொருள் தூண்டல்-அதனை வாங்குதலும் வாய்க்குக் கொண்டு செல்லுதலும் நாக்கு சுவைத்து உண்ணுதலும் போன்றவை துலங்கல்; எதிரே உள்ள ஒரு பொருள் தூண்டல்-கண் உற்றுப் பார்த்து அதற்கேற்பச் செயல் புரிதல் துலங்கல்; மலர் தூண்டல்மூக்கால் மணம் அறிந்து பறித்தலும் வாங்குதலும் சூடுதலும் மோந்து பார்த்தலும் போன்றவை துலங்கல்: மணியோசை தூண்டல்-அதனைக் காதால் கேட்டு அதற்கேற்ப வேலை தொடங்குதலும் செய்தலும் போன்றவை துலங்கல். இவ்வாறு வெவ்வேறு எடுத்துக் காட்டுகள் பல தரலாம்: மழை பெய்தால் குடை பிடிக்கிறோம்; இங்கே மழை துாண்டல்-குடை பிடித்தல், விரைந்து நடத்தல் போன்றவை துலங்கல். இவ்வாறு