பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
 


ஒர் உட்கருவி தனியாக இருப்பது புலனாகும்-என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்குரிய பதில் வருமாறு:

ஒரு பொறி ஏதேனும் ஒன்றில் முனைப்பாக ஈடுபட் டிருக்கும் போது, மற்ற நான்கு பொறிகளுமே அடங்கி யிருக்கக் கூடும். சுந்தரர் என்னும் சிவனடியார், கடவுள் திருமேனிச் சிலையை மிக்க ஆர்வத்துடன் கண்ணால் கண்டு வணங்கிக் கொண்டிருந்தபோது, மற்ற நான்கு பொறிகளும அடங்கிக் கண் என்னும்பொறியோடு ஒன்றி யிருந்ததாகச் சேக்கிழார் என்பவர், பெரியபுராணம் என்னும் நூலின் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்:

“ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள”

(பெரிய புராணம்-தடுத்தாட் கொண்ட புராணம்-106)


என்பது அவரது பாடல் பகுதி. மூளை, முனைப்பாக ஏதேனும் ஒரு தூண்டலுக்குத் துலங்கிக்கொண்டிருக்கும் போது, மற்ற பொறிகளின் தூண்டலில் கவனம் இல்லாமல் இருப்பது இயற்கையே. இங்கே மனம் என்னும் ஒன்று தேவையில்லை. நாம் தேடிக் கொண்டு போகும் ஒருவர் எதிரே வந்து கொண்டிருப்பதை நம் கண் பார்த்தாலும், இந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காமல், நாம் வீட்டிலிருந்து புறப்படும் போது மனைவியோ-மக் களோ கடையில் வாங்கிவரச் சொன்னதிலேயே முனைப்பாகப் பின் நோக்சி ஈடுபட்டிருந்தால், அந்தத் தூண்டலுக்கு ஏற்பவே நாம் துலங்கிக் கொண்டிருப்போம்: அதனால் எதிரே வருபவரை இனம் கண்டு கொள்ள முடியாமற் போகிறது. இவ்வாறு எல்லாப் பொறிகளின் தூண்டலுக்கும் கொள்ள வேண்டும். இது கவனக் குறைவு அன்று; இது கவன மாற்றம் ஆகும். அஃதாவது, ஒரு துண்டலுக்குத் துலங்கவேண்டிய நேரத்தில் வேறு துாண்டலுக்குத் துலங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது இதற்குப்