பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


இந்தக் கருத்தைத் திருவள்ளுவர் என்னும் தமிழ் அறிஞர் திருக்குறள் என்னும் நூலின் பாடல் ஒன்றில் மிகவும் நுட்பமாகப் பொதித்து வைத்துள்ளார். மனைவியைப் பிரிந்து வெளியூர் சென்றிருந்து திரும்பிய கணவன், மனைவியை நோக்கி, உன்னை நான் அடிக்கடி நினைத்தேன்’ என்று கூறினானாம். உடனே அவள், நீங்கள் என்னை அடிக்கடி மறந்திருந்ததனால்தானே அடிக்கடி நினைக்க வேண்டி நேர்ந்தது; ஏன் அவ்வாறு மறந்: தீர்கள்?’ என்று கூறி, அவனைத் தழுவாமல் ஊடல் கொண்டாளாம்.

“உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்திர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக்க னள்’. - (1316)'

(திருக்குறள்-காமத்துப்பால்-புலவிநுணுக்கம்)

என்பது அப்பாடல். மனைவி என்னும் தூண்டலுக்குத் துலங்காமல், வேறொன்றிற்குத் துலங்கியதை இது குறிக் கின்றது. எனவே, மனம் என ஒன்று தனியே இருப்ப தாகவும், அது வேறு எங்கேயோ-வேறு எதிலோ ஈடுபட்டிருப்பதாகவும், சிலர் கூறுவது பொருந்தாது. அன்னார் வேறொன்றும் கூறுவர் : திறமை மிக்க ஒருவர் ஒரே நேரத்தில் பல செய்திகளுக்கு ஈடு கொடுக்கிறார். ஒரே நேரத்தில் எட்டுச் செய்திகளைக் கவனிப்பதற்கு அட்டாவதானம்’ என்றும், பத்துச் செய்திகளைக் கவனிப்பதற்குத் தசாவதானம்’ என்றும்,பதினாறு செய்திகளைக் கவனிப்பதற்குச்சோட சாவதானம் என்றும் பெயராகும். மனம் என்னும் ஒன்று தனியே இருப்பதால்தான், அது, எல்லாச் செய்திகளிலும்-செயல்களிலும் விரைந்து மாறி மாறி ஈடுபாடு கொண்டு பதில் தர முடிகிறது- என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்குரிய பதிலாவது :- மனம் என ஒன்று: