பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93
 


இனி. உடம்பில் ஐம்பொருள்களும் உள்ளவாற்றினை நோக்கலாம். விண்: உடம்பினுள் காற்றும் நீரும் தடை படாமல் போய் வரும் பகுதிகளை விண்ணின் கூறு எனலாம். எடுத்துக்காட்டாக. மூக்கின் இரு வாயில் களிலும் வெற்றிடமாகிய விண்ணின் கூறுஅமைந்துள்ளது எனக் கொள்ளலாமன்றோ? அடுத்தது காற்று: மூக்கின் வழியாகக் காற்று போய் வருவது தெரிந்ததே, வாய் வழி யாகக் காற்று போவதும் உண்டு; வெற்று (காலி) வயிற்றில் காற்று இருக்கும்; இந்த அமைப்பால்,உடம்பில் காற்றின் கூறு இருப்பது அறியப்படும்.

அடுத்தது தீ: எவ்வளவு தீனி போட்டாலும் எரித்து விடுகிறது என்று சொல்வது உலக வழக்கு; சில நேரத்தில் உடம்பைத் தொட்டால் கொதிக்கிறது; சில சமயம் மூக்கிலிருந்து வெப்பக் காற்று வருகிறது; சில நேரத்தில் கழிக்கும் சிறுநீர் சுடுகிறது. நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்து எழுந்ததும் அமர்ந்திருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால்; சுடுகிறது; நீண்ட நேரம் படுத் துறங்கிய இடத்திலே காலை வைத்தால் சுடுகிறது; உடம்பில் கட்டிய ஈரத்துணி உடம்பின் வெப்பத்தால் காய்ந்து விடுவதுண்டு; உடம்பில் எப்போதும் குறிப்பிட்ட அளவு வெப்பம் இருந்தால் தான் உயிர் வாழமுடியும்உடம்பில் வெப்பம் இல்லாவிடின் நேர்வது இறப்பே; எனவே, இவற்றைக் கொண்டு தீயின் கூறு இருப்பது அறியப்படும்.

நான்காவது நீர் : உடம்பில் நீர் இருக்கிறது என்ப தற்கு மிகுதியாகச் சான்று வேண்டா. உடம்பு முழு வதும் குருதி இருக்கிறது-அதில் நீர் இருக்கிறது. வாந்திபேதி (காலரா) நோயுற்றவரின் குருதியில் உள்ள நீர், குருதியினின்றும் பிரிந்து கழிச்சல் என்னும் பேருடன் வெளியேறுகிறது; அதை ஈடுகட்டவே.