பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வீகப்
பெருஞ்சுமை

மயமும் சமதருமமும்’ என்பதுபற்றி உருசிய காட்டின் புரட்சித் தந்தை லெனின் எழுதியுள்ள கட்டுரையின் பிழிவு இது. கருத்து அவருடையது; கவிதை என்னுடையது.

எலிப்பொறிதான் சமுதாயம்; இந்த நாட்டில்
ஏழைகளின் நல்வாழ்வை மிகக் குறைந்த
நிலப்பிரபும் செல்வர்களும் சுரண்டு கின்றார்,
நீர்ப்பாம்பு திமிங்கிலத்தை விழுங்க லாமா?
அலுத்துவரும் பாட்டாளி வாங்கும் கூலி
ஆவியினை வைத்திருக்கத் தானே யன்றிக்
கழுத்துவரை வயிறுகொண்ட பணக்கா ரன்போல்
கட்டிலின்பம் காண்பதற்கா? இல்லை யில்லை.


ஆடுகளே கொடுவாளைத் தீட்டித் தம்மை
அறுப்பவர்க்குக் கொடுப்பதுபோல், ஒய்வில் லாமல்
பாடுபுடும் பாட்டாளி மக்கள், ஏய்க்கும்
பணக்காரர் பைகளையே நிரப்பு கின்றார்.
கேடுகெட்ட இந்நிலைமை மாறா விட்டால்
கேவலந்தான் நம்வாழ்வில் மிஞ்சும்; இந்த
நாடுபெற்ற சமுதாயம் என்றென்றைக்கும்
நலிகின்ற சமுதாயம் ஆகிப் போகும்.