பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


புதுப்புன்னை இலைக்காலில் தர்ப்பை குத்திப்
புண்செய்த நேரத்தில், குனிந்த வண்ணம்
மதுக்கண்ணால் புதுப்புண்கள் உங்கள் வெற்றி
மார்பின்மேல் நான்செய்தேன் ; எழில் பிதுங்கக்
குதிகாலில் நானமர்ந்து கொண்டி ருந்த
கோலத்தைக் கண்ணாலே தின்றீர்! பின்னர்
எதிர்க்காற்றில் செல்லுகின்ற கொடியைப் போல
என்பக்கம் பார்த்துக்கொண் டேந டந்தீர்.

கொடிமுல்லை மண்டபத்தில் நீரும் நானும்
கொலுவிருந்தோம் ; அப்போது நான் வளர்த்த,
நெடும்புருவ மானங்கு வந்த தாலே,
நீர்கையில் வைத்திருந்த தொன்னைத் தண்ணீர்
கொடுப்பதற்குக் கூப்பிட்டீர்; அதும ருண்டு
கோதையெனை நெருங்கியதைக் கண்டு ‘சின்ன
இடையழகி இளம் இனத்தைச் சேரும் ! நீங்கள்
இருவருமே இக்காட்டு வாசி’ என்றீர்.

காலடியால் காதலரை வேவு பார்க்கும்
காமனென்னைக் காய்கின்றான் என்றேன் ; நீரோ
கோலமயில் உனைக்காயும் காமன், என்னைக் கொளுத்துகிறான், என்றுரைத்தீர் ; ‘இரக்கமின்றி
ஆலங்காய்ச் சந்திரனைப் பகல்அ ழிக்கும் !
அல்லியினை அடியோடு சிதைப்ப தில்லை ;
வேலோரம் இருக்கின்றாய் பெண்ணே ! நானோ
வேல்முனையில் இருக்கின்றேன்’ என்று சொன்னீர்.