பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14




பூக்காட்டில் முத்தமிட்டோன் என்னை யின்று
புழுதியிலே தள்ளிவிட்டான் ; கண்வி ழிக்காச்
சாக்காடே ! உன் முத்தம் அணைத்த பேரைச்
சாய்க்கின்ற முத்தந்தான் ; ஆனால் நீயோ
காக்கவைத்துக் கயவரைப்போல் தள்ளமாட்டாய் ;
கட்டாயம் மறுக்காமல் ஏற்றுக் கொள்வாய்,
சீக்கிரத்தில் சாவே நீ வா வா ; இந்தச்
சிறுநரிகள் நடுவினிலே வாழமாட்டேன்.

[சகுந்தலை மயங்கி வீழ்கிறாள்]