பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


பணப்பெட்டி திறந்துவைத்தாற் போன்று தோன்றும்
பண்புள்ள விண்மீன்காள்! இவள் இழைத்த
குணக்கேட்டை உம்மிடத்தில் எடுத்துக் கூறக்
கூசுகின்றேன். வெண்ணிலவே! விண்ணில் தோன்றும் மணப்பெண்ணே! கற்புநிலை மாறி டாமல்
மாணிக்கப் பரிதியினைச் சுற்றும் பெண்ணே!
இணைத்திருந்த என்கையை நழுவ விட்டே
இன்னொருவன் பின்னிவளும் சென்று விட்டாள்.

துணையோடு நானுறங்கும் இராக்கா லத்தில்
தூங்காமல் நின்றெரியும் விளக்கே! உன்னை
அணைத்துவிட்டால் ஏற்றுதற்கு முடியும். ஆனால்
அழகேறி ஆட்சிசெய்யும் இவளு டம்பில்
இணைந்திருக்கும் உயிர்விளக்கை அணைத்துவிட்டால்
ஏற்றுதற்கு முடியாது மீண்டும்; வைரக்
கணையாழி போலிருந்த இவளோ, இன்று
கைநழுவிக்குப்பையிலே வீழ்ந்து விட்டாள்.

குருதியைப்போல் மலர்கின்ற பூவே! உன்னைக்
கொடியினின்றும் பிரித்துவிட்டால் அன்றே வாடிச்
சருகாகிப் போகின்றாய்; உன்றன் வாழ்க்கைச்
சரித்திரமும் முடிந்துவிடும்; உன்னைப் போல்என்
அருகிருக்கும் அழகரசி இறந்த பின்னால்
அவளின்பம் எனக்கில்லை; ஆத லாலே
மெருகிருக்கும் அவள்பளிங்குக் கன்ன மேட்டில்
மெல்லுதட்டில் கடைசிமுத்தம் விதைக்கின் றேன்நான்.