பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



சீசரைப்போல் வாழ்ந்தென்ன? உலகை வென்ற
சிகந்தரைப்போல் படைவீரம் காட்டி யென்ன?
காசுமலை மேலேறிப் பார சீகக்
காவலர்போல் இருந்தென்ன? ஹோம ரைப்போல்
ஆசுகவி ஆயிர்ந்தான் அடுக்கி யென்ன?
அத்தனையும் தான்மணந்த பெண்ணொ ருத்தி
மாசுடையாள் என்றொருசொல் தோன்று மாயின்
மணல்வீட்டைப் போல்நொடியில் சரிந்து போகும்!

பண்ணுதிர்க்கும் கின்னரமே! என்னு டம்பில்
பட்டைப்போல் ஒட்டிக்கொண் டிருந்த பெண்ணே!
கண்ணீரில் கரைகின்றேன்; நயம் குறைந்த
கவிதையைப்போல் நான்விரைவில் சாவேன்; உன்றன் எண்ணத்தால் ஏக்கத்தால் கறையான் பற்றி
இற்றுதிரும் மரத்தைப்போல் அழிந்து போவேன்
பெண்ணாலே பெருமையெலாம் இழந்து வீழ்ந்த
பெருவீரன் ஆண்டனிபோல் நானும் வீழ்வேன்

——————