பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24



பொருளைப் பற்றிநான் கருதுவது இதுதான் !
மெச்சத் தகுந்த மன்னனாய் வாழ்ந்து
பிச்சைக் காரனாய்ச் செலவுசெய் வதைவிட,
பிச்சைக் காரனாக வாழ்ந்து
பெற்ற கடைசிக் காசையும், ஆளும்
மன்னனைப் போலச் செலவு செய்து
வாழும் பெருமித வாழ்வே சிறந்தது.

ஒருநாள் மாலை உருண்டைக் கதிரவன்
மேற்குவான் வெள்ளத்தில் மிதந்துகொண் டிருந்தான்.
நின்ற ஆல்ப்சின் நெடுமையைப் போரில்
வென்றதன் புகழால் குறைத்த வீரன்
நெப்போ லியன்கல் லறைக்கு முன்னால்
நின்றுகொண் டிருந்தேன் . அக்கல் லறையோ,
வண்ணப் பளிங்கை வளைத்துக் கட்டிப்
பொன்னால் முடித்த புதுமையை உடையது.
நின்ற என்றன் நெஞ்சத் திரையில்
வென்ற அவன்போர் வெற்றிகள் விழுந்தன.

சின்ன வயதில் சீன்நதிக் கரையில்
தன்னுயிர் முடிக்கச் சென்றஅவ் விளைஞன்
பாரீசு நகர வீதியில், கிளம்பிய
ஆரவா ரத்தை அடக்கக் கண்டேன் ;
பனிமலை அவனுக்குப் பணிவதைக் கண்டேன் ;
இரும்புக் கோட்டைகள் அவனுக்கு முன்னால்
எறும்புப் புற்றுபோல் இடியக் கண்டேன் ,
எதிரிலாப் பெரும்பே ரரசுகள் அவனது
குதிரைக் குளம்பில் மிதிபடக் கண்டேன் ;
பன்னீர் மனைவி பதைப்புறு காதலைக்
கண்ணீரில் எழுதிக் காட்டிய போதும்