பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிவகுப்பு
ஓய்ந்தது

ந்திய நாட்டு வானம்பாடி என்றும், கவிக்குயில் என்றும் பாராட்டப் பெற்றவர் திருமதி சரோஜினி நாயுடு. அவர் காந்தியடிகளைப் பார்த்து, ‘என் அன்புள்ள சுண்டெலியே!’ என்று அழைக்கும் அன்புரிமை பெற்றவர். ஆங்கிலப் பேரரசின் கூரிய நகப் பிடியிலிருந்து இந்தியத் துணைக் கண்டம் விடுதலை பெற்ற அந்நன்னாளில், உலகத்தார்காதில் விழும்படி வானொலியின் மூலம் அக்குயில் தன் இன்ப வெள்ளத்தைப் பாய்ச்சியது. அக்கூவல் வடிவம் பெற்றுக் கவிதையாக உங்கள் கண்முன் காட்சியளிக்கிறது.

அடிமை விலங்கை அறுத்த இந்தியக்
குடிகளின் சார்பில் கூவும் குயில் நான் !
பண்டைநாள் தொட்டுப் பரிதி விளக்கை
மண்டிலம் சுற்றும் மண்ணுல கத்தில்
சுதந்தரக் கனியைச் சுவைத்திடும் மக்களே !
சுதந்தரம் கெட்டுத் துயர்ப்படும் மக்களே !
உங்களுக் கென்றன் வாழ்த்தும் வருத்தமும் !