பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


நெடுந்தொலை நாட்டில் இருந்திங்கு வந்துநாம்
படுந்துயர் வறுமை பலவும் பகிர்ந்தும்,
பட்டி தொட்டியில் பள்ளிகள் அமைத்தும்,
வருந்துவோர்க் கெல்லாம் மருந்தகம் தந்தும்,
திருச்சபை நடத்திய கிறித்தவத் தொண்டரை
வாழ்த்தி வணங்கி வரவேற்கின்றோம்.
பெற்றஇந் நாட்டின் விடுதலைக் காக
மற்றநாட் டெல்லையில் மறைந்து திரிந்தும்,
நாடு கடத்தப் பட்டும், சொல்லரும்
பாடுகள் சுமந்தும், கைம்மாறு கருதாமல்
இன்னுயிர் வழங்கிய முன்னோடி களுக்குக்
கண்ணீர் மாலை கட்டிப் படைக்கிறோம்.

ஆதிக்க வெறி கொண்ட ஆங்கிலச் சக்கரப்
பற்களாய்ப் பகைவராய்ப் பலபேர் இருப்பினும்,
இந்திய மக்கள் எழுப்பிய குரலுக்கு
வாழ்த்துக் கூறிய ஆங்கில நண்பரும்
இல்லாமல் இல்லை ; அவர்க்கும் நன்றி.
பூதப் பசிகொண்ட ஆங்கில அரசின்
யூத அமைச்சன் டிஸ்ரேலி என்பவன்
வீர அரசி விக்டோரி யாவுக்குப்
பேரர சொன்றைப் படைத்துக் கொடுத்தான்.

அந்த அரசியின் சொந்தப் பேரன்
மதிப்பிற் குரிய மவுண்ட்பேட்டன் துரைமகன்.
பேரனே பாட்டியின் பேரர சுடையக்
காரணம் ஆயினன்! இந்தியர் மகிழ்ச்சிக்கு
வேறென்ன வேண்டும் ? விளைந்த இவ் வெற்றி