பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


கடிக்கவந்த இந்தியினை முடிப்ப தற்குக்
கைத்தடியை இவரெடுத்த நேரம், பள்ளிப்

படிப்பறையில் நானிருந்தேன்; ஆனால் நெஞ்சம் பகுத்தறிவுக் காந்தத்தால் இழுக்கப் பெற்றேன். பிடித்தபிடி விடாப்பெரியார், இரக்க மின்றிப் பெல்லாரிச் சிறைக்குள்ளே தள்ளப் பட்டார்; அடுத்த அடி என்னவென்று கேட்போர் ஏங்க அடுக்குமொழி பேசுமண்ணா அரங்கில் வந்தார்.

குடியரசுப் பாசறையில் அறிஞர் அண்ணா குதிரைப்போர்ப் படைத் தலைவர் ஆனார்; ஓயாக் கடிகார உழைப்பாலே இந்த நாட்டுக் காளையர்க்குக் களம் அமைத்தார்; சூழ்நி லைக்கே அடிபணிந்து பெரியாரைப் பிரிந்தார் ; இன்றோ அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்திச் சென்றார். துடைத்தாலும் போகாது நிலாக் கறுப்பு! தூக்கத்தி லும்போமோ இவர் நினைப்பு?

முடியாது முடியாது என்ற வற்றை முடித்துவைத்த பேரறிஞர் அண்ணா பெற்ற அடியார்கள் அவருக்கோர் நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்கள் ; அதிலோர் காட்சி! கொடியானை போர்க்களத்தில் கிடப்ப தைப்போல் குவிந்தமலர்க் கூட்டத்தில் கிடந்த அண்ணா உடல்மீது பெருக்கெடுத்த கண்ணீர், இந்த உரைவேந்தர் பெரியாரின் கண்ணீர் ஆகும்.