பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேனில் வேதனை !

ந்திர விழாக் கடற்கரை. கொழுந்து மாதவிக்கும் அவள் மார்பில், அழுந்தும் கோவலனுக்கும் யாழ்ப்பூசல் நடக்கிறது. பாட்டடி பட்டுப் பதைத்துப் பிரிகிறான் பட்டினக் கோவலன். அவன் இரும்பு நெஞ்சைக் கரும்பு நெஜஞ்சாக்கக் கடிதம் எழுதுகிறாள் கண்ணீர்க்காதலி. அக்கடிதத்தின் கவிதை வடிவம் வேனில் வேதனை.

செவ்வேளே ! எணைப்பி ரிந்த
சினவேளே ! இரண்டு காலில்
எவவாறு நிற்கும் கட்டில் ?
இரண்டுசீர் ஒன்றோ டொன்று
கவ்வாமல் பிறப்ப துண்டா
காவியம் ஊடல் செய்ய
இவ்வேளை ஏற்ற தில்லை ;
இளவேனில் வந்த தாலே.

பொறிக்குயில் எக்கா ளங்கள்
புடைசூழப் படையெடுக்கும்
கருப்புவிற் கார னுக்குக்
களமானேன்; அவன்வி டுக்கும்
நெருப்புக்கூர்க் கணைகி ழிக்க
நிற்குமென் நெஞ்சைத் தைக்க
விருப்பமா ? இன்றேல் காதல்
வேக்காடு சாக்கா டாகும்.