பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

தூக்கணங் குருவிக் கூட்டின்
தோற்றத்தை புடைய யாழின்
தாக்கான நரம்பைத் தொட்டு
நானிசை எழுப்பிப் பார்த்தேன்,
தூக்கென்றும் பாணி யென்றும்
தொடுக்கின்ற இசைவெள் ளத்தைக்
காக்கின்ற ஆணி இன்று
கழன்றதால் மயங்கி நின்றேன்.


ஒப்பற்ற பெரிய வானின்
உயரத்தில், நடுவில் தீய்ந்த
அப்பத்து வெண்ணி லாவால்
ஆயிரம் கொப்பு ளங்கள்.
வெப்பத்துக் காமம் வந்து
வெதுப்புவ தாலே, என்றன்
கொப்பத்து வெல்ல மார்பில்
கொப்புளம் கோடி கோடி !


காற்சிலம் பிரண்டும், உங்கள்
கைச்சிலம் பிரண்டும் இன்றைக்(கு)
ஆர்த்திடும் தொழில் மறுத்தே
அடங்கின விரிந்து கொட்டும்
பாற்குடம் ஆனேன் தாக்குப்
பட்டதேன் கூடும் ஆனேன்.
நாற்குலப் பண்ணில் மூன்றர்ய்
நானானேன். உங்க ளுக்கே !


நால்வகைச் சாதிப்பண்கள் : இணை, கிளை, பகை, நட்பு, மூன்றாம்பண் பகை.