பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

காசுக்கு மேடை யாட்டம்
கற்றவள், உங்கள் முன்னால்
ஆசைக்கு மேடை யாட்டம்
ஆடினேன்! பொன்மு ழுக்கு
வேசைநான் என்பீர் காதல்
வேந்தரே ! உம்மை நெஞ்சில்
பூசித்தேன் என்ப தல்லால்
பொன்பொருள் கேட்ட துண்டா ?


நெருங்கிநான் வரும்போ துங்கள்
நெஞ்சத்தைப் பங்கு போடும்
அரும்புமே கலையை எவ்வா(று)
ஆற்றுவேன்; அந்தக்கட்டிக்
கரும்பினை ஆலை வாயில்
கசக்கிநீர் பிழிய லாமா ?
நெருங்குமுள் புலாவெ றுத்தீர் :
நெடுஞ்சுளை ஏன்வெ றுத்தீர் ?


இழுத்துநாண் வளைத்த விற்போல்
இதழ்களைக் கொண்ட உங்கள்
செழித்தபொன் மேக லைமேல்
சீற்றமா ? குருக்கள் முன்னால்
கழுத்தைநான் வளைக்க வில்லை
கயிற்றுப்பொன் வேலிக் காக !
பழச்சுவைக் காரி நான்உம் ப
டுக்கைப்பங் காளி யன்றோ ?