பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


மணம்மாறு படத்தொ டுத்த
மல்லிகை கழுநீர், மற்றும்
புனம்நாறும் சண்ப கப்பூ
பூட்டிய தாழை யேட்டில்
குணம்மாறு பாடில் லாஎன்
கொள்கையை விளக்கி யுள்ளேன் ;
சினம்மாறு படுமா ? கண்கள்
சிவக்குமா நமக்கு மீண்டும் ?