பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

எரிமலையை எவ்வாறு கைவைத்து மூட முடியாதோ, அதுபோல் காதலையும் யாராலும் மறைக்க முடியாது. ஹெலாயைப் பற்றி அபெலார்டு எழுதிய காதல் வரிகளை, பாரிசுப் பருவ வாய் ஒவ்வொன்றும் முணுமுணுக்கத் தொடங்கியது. அவர்கள் பலாச்சுளைத் தொடர்பு பலர் வாயில் விழுந்ததால் அலராயிற்று.

காதலர் பிரிட்டானிக்கு ஓடிவிடுகின்றனர். அபெலார்டு அவளைத் தன் கழுத்தில் நிரந்தர மாலையாக்கிக் கொள்ள விரும்பினான். திருமணத்தால் அவன் சமய மதிப்பும், பதவியும் பாழ் படும் என்பதை உணர்ந்த ஹெலாய் முதலில் மறுத்தாள். மேலும் திருமணத்தால் காதல் வாழ்வு சுவையற்றதாகி விடுகிறது என்பது அவள் கொள்கை, எப்படியோ திருமணம் நடந்தேறி விட்டது; குழந்தைக்கும் தாயானாள் ஹெலாய்.

காதலர் மீண்டும் பாரிசு திரும்பினர். அபெலார்டின் சமயவாழ்வு ஹெலாயோடு வெளிப் படையாக இல்வாழ்க்கை நடத்துவதற்கு தடையாக இருந்த காரணத்தால் மீண்டும் களவொழுக்கத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஹெலாயின் மாமன் ஃபுல்பெர்ட் (Fulbert) குமுறும் எரிமலையானான். ஒருநாள் இரவு அபெலார்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஃபுல்பெர்டின் அடியாட்கள், கண்மூடித்தனமாகத் தாக்கி அவனை முடமாக்கினர். உயிர்பிழைக்க அபெலார்டு ஊரை விட்டே ஓடினான். காதலியின் மென்மையான உள்ளம் உடைந்து போகுமே என்ற காரணத்தால், அபெலார்டு தனக்கு நேர்ந்த அவமானத்தையும், ஆற்றொனாத் துயரையும் ஹெலாய்க்குத் தெரியப்படுத்தவில்லை. அவளை