பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

ஒரு கன்னி மாடத்தில் சேர்த்து விடுமாறு வற்புறுத்தினான். அவளும் கன்னிமாடத்தில் சேர்ந்து கொஞ்சகாளில் கன்னிமாடத் தலைவியும் ஆனாள்.

வாழ்க்கைத் துன்பத்தால் மனமுடைந் திருந்த ஒரு நண்பனுக்கு, ஒருமுறை ஆறுதல் கூறுவதற்காக அபெலார்டு தன் வாழ்க்கைச் சோதனைகளை ஒரு கடிதமாக்கி அனுப்பியிருந்தான் அக்கடிதம் எதிர்பாராதவிதமாய் ஹெலாயின் கையில் சிக்கிவிட்டது. அக்கடிதத்தைக்கண்ணுற்ற ஹெலாய் கண்ணிர்க்குளமானாள்.தன்பொருட்டுத் தன் காதலனுக்கு ஏற்பட்ட பெருந்துன்பத்தை நினைந்து கதறி அழுதாள். அவ்வழுகையின் வெளிப்பாடே இக்கடிதம். ஒவ்வொரு சொல்லையும் கண்ணிரில் ஊறவைத்து இக்கடிதத்தை அவள் எழுதியிருக்கிறாள்.

அபெலார்டு-ஹெலாய் கண்ணிர் வரலாறு அலெக்சாண்டர் போப், ரால்ஃப் ஆடம்ஸ் கிரேம், ஜியார்ஜ் மூர், ஹெடன் வேடல் போன்ற கவிஞர்கள், நாடகாசிரியர்களின் கைவண்ணத்தால் காவிய வடிவம் பெற்றுச் சிறப்புற்றது.

வேட்டை நாய்கள் போல் தன்னைப் பின் தொடர்ந்து தாக்கிய எதிரிகளுக்கு அஞ்சி அபெலார்டு பிரெஞ்சு நாட்டில் உள்ள ஒவ்வொரு மடமாக ஒளிந்து திரிந்தான். சமயப் போர்வையில் சாக்கடை வாழ்க்கை நடத்திவந்த அக்காலப் பாதிரிமார், நேர்மையான தன் காதலை எள்ளி நகையாடியதைக் கேட்டு உள்ளம் புண்ணானான். அபெலார்டும், ஹெலாயும் கற்புவிலங்கைத் தாங்களே மாட்டிக்கொண்டு வாழ்நாள் பூராவும் ஏக்க வாழ்க்கை நடத்தினர்.