பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தாயாய்த் தந்தையாய்த்
தழுவுகின்ற காதலராய்,
தலைவராய் உடன்பிறப்பாய்
விளங்கும் அபெலார்டுக்கு,
அவருடைய அன்புமனைவி,
ஆருயிர்க் காதலி, அடிமை,
உடன்பிறப்பு, அழுங்குழவி...
ஹெலாய் ஆராக்காதலோடும்
பணிவோடும் விடுக்கும்
கண்ணிர் ஓவியம்...


<poem>ஆவியே! நீங்கள் நண்பர்க்
கனுப்பிய கடிதக் கண்ணிர்க்
காவியங் கண்டேன்: தீண்டக்
கைநடுக் குற்றேன்: உம்மைத்
தாவிய உரிமைக் கைகள்
தாள்களைத் தொடலாம் என்று
தூவிய உம் கருத்துத்
தோணியைத் திறந்து பார்த்தேன்.


கடிதத்தில் கண்ட தெல்லாம்
காதல! உங்கள் நெஞ்ச
வெடிப்புகள்! முறிந்து வீழும்
வேதனைத் தூண்கள்; துன்பத்
தடிப்புகள்! தீயோர் சுட்ட
தழும்புகள்! தைத்த புண்கள்!
அடிக்கடி கிளம்பு கின்ற
அனற்பெரு மூச்சுத் தேர்கள்!